ஐ.நா – இலங்கை அரசு மோதலும் சவால்களும்-Crep

July 7, 2010 at 10:08 am · Posted Public Articles

நேற்று ஐ.நா கொழும்பு அலுவலகம் முன்னால் இடம்பெற்ற எதிர்ப்பு பேரணியை தொடர்ந்து ஐ.நா அலுவலகம் மறுஅறிவத்தல் வரை மூடப்பட்டுள்ளதாக செய்திச்சேவையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்குற்றங்கள் தொடர்பாக ஐ.நா நியமித்துள்ள நிபுணர்கள் குழுவை களைக்க கோரியே இவ்வார்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது. ஏற்கனவே மனித உரிமைகள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கான GSP+ வரிச்சழுகையை இரத்து செய்துள்ள இவ்வேளயில் ஐ.நா உடனான முருகல் நிலை பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்துமென அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இலங்கை தொடர்பாக ஐ.நாவின் நடவடிக்கை பல வாதப்பிரதிவாதங்களை சர்வதேச மட்டத்தில் ஏற்படுத்தி இருக்கும் இவ்வேளை; ஐ.நா அலுவலகம் மூடப்பட்டதானது இலங்கை மீதான சர்வதேச அழுத்தத்தினை ஏற்படுத்தும் வாய்ப்பு நிலவுவதாக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். சீன, ஜபான் எதிர்ப்பினையும் தாண்டி இலங்கை மீதான போர்க்குற்றங்கள் நிரூபிக்கப்படும் பற்சத்தில் இலங்கை அரசு மீதான தடைக ளோ அழுத்தங்களோ பாதிப்பை ஏற்படுத்துமா என்ற கேள்வியும் காணப்படுகின்றது. டர்பூர் விவகாரம் தொடர்பாக சூடான் அரச அதிபர் மீதான ஐ.நா நடவடிக்கை வெறும் வார்த்தைப்பிரகடனமாக அமைந்ததுபோல் இதுவும் அமைந்துவிடும் என முக்கிய அரசியல் பிரமுகர் ஒருவர் கருத்து தெறிவிக்கின்றார். ஏனனில் இந்திய ஆதரவு இலங்கைக்கு இருக்கும் வரை அமெரிக்காவும் இந்தியாவை திருப்திப்படுத்தவேண்டிய நிலைக்கு தள்ளப்படும். அத்தோடு ஈராக், ஆப்கான் மீதான போர்க்குற்றங்கள் தொடர்பில் அமெரிக்காவையும், பலஸ்தீன் விவகாரத்தில் இஸ்ரேலையும் தண்டிக்க முடியாத ஐ.நா இலங்கை விவகாரத்தில் தன்னை நடுநிலைமைவாதியாக காட்டிக்கொள்ள முனைவது மேற்கு எதிர்நிலை நாடுகளின் ஆதரவை இலங்கைக்கு அதிகப்படுத்தும் என்று கருத்து தெரிவிக்கப்படுகின்றது.
ஐ.நா உடனான இம்முறுகல்நிலை புலிகள் ஏற்படுத்தியுள்ள நாடுகடந்த தனிநாட்டு அலகை வழுப்படுத்த வாய்ப்பாக அமையும் என அரசியல் துறை பீடாதிபதி ஒருவர் குறிப்பிடுகின்றார். ஏனெனில் தற்போது ஏதாவது ஒரு நாடு இதனை அங்கீகரிக்கும் பற்சத்தில் ஐ.நாவின் பார்வையாளர் அந்தஸ்து வழங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். வெனிசூழா நாடுகடந்த அரசை அங்கீகரிப்பதற்கான சமிக்ஞையினை காட்டியுள்ள நிலையில் தற்போதய முறுகள் நிலை புலிகளுக்கு சார்புநிலையினை ஏற்படுத்தும். தொடர்ந்தும் 10 வருடங்கள் பார்வையாளர் அந்தஸ்து கிடைக்கப்பெறுமானால் உறுப்புருமை வழங்கவேண்டிய நிலைக்கு ஐ.நா தள்ளப்படும். அவ்வாறு நிகழும் பற்சத்தில் பலஸ்தீன் போன்று தமீழீலம் அங்கீகரிக்கப்படவேண்டிய நிலை சர்வதேசத்திற்கு ஏற்படும்.
இவ்வாரான பல்வேரு சவால்களுக்கு மத்தியில் இலங்கை அரசு எவ்வாறு இராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் சவால்களை வெற்றிகொள்ளும் என்பதை அரசியல் வட்டாரங்கள் கூர்ந்து அவதானித்துக்கொண்டிருக்கின்றன.

Your Comment

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>