சட்டவிரோத குடியேறிகளுக்கு கனடா எச்சரிக்கை

August 19, 2010 at 10:53 am · Posted Public Articles

சட்டவிரோத அகதிகளுக்கான பிரவேச முறையை கடுமையாக்க பின் நிற்கப்போவதில்லை என கனேடிய பிரதமர் ஸ்டீவன் ஹார்பர் அறிவித்துள்ளார்
கனேடிய ஊடகம் ஒன்றுக்கு தகவல் தெரிவிக்கையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.கனடா, தற்போது அகதிகளுக்கான இடமாக மாறியுள்ளது. வருடாந்தம் கனடா, ஆயிரக் கணக்கானோருக்கு குடியுரிமைகளை வழங்கிவருகிறது.

எனினும் அதனை பயன்படுத்திக் கொண்டு சட்டவிரோதமாக கனடாவுக்குள் வருவோர் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்டீவன் ஹார்பர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கனடாவுக்கு கடந்த வெள்ளிக்கிழமையன்று, சென்று சேர்ந்த 492 இலங்கை அகதிகளும் தீவிரமான விசாரணைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக மனித உரிமை சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

Your Comment

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>