இலங்கையர்கள் பணியாற்றிய “சுயஸ்’ கப்பல் சோமாலிய கடற்கொள்ளையர்களினால் கடத்தல்-Crep
July 31, 2010 at 8:22 pm · Posted Public Articles
| இலங்கையர்களும் ஊழியர்களாக பணியாற்றும் கப்பலொன்றை சோமாலிய கடற் கொள்ளையர்கள் கடத்தியுள்ளனர். பனாமா கொடி தாங்கிய எம்.வி. சுயஸ் எனும் கப்பலே இவ்வாறு கடத்தபட்டுள்ளதாக சோமாலியாவிலுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் கடற்படை நேற்று அறிவித்துள்ளது. |
| சுயஸ் கப்பல் சோமாலிய கடற்கொள்ளையர்களின் ஆயுதத் தாக்குதலுக்கு உள்ளானதாகவும், சில நிமிடங்களின் பின்னர் அக்கப்பலுக்குள் கடற்கொள்ளையர்கள் ஏறியதாகவும், தெரிவிக்கப்படுகின்றது.இந்தத் தாக்குதலின் பின்னர் குறித்த கப்பலுடன் தொடர்பு கொள்ள முயற்சித்த போதும் அது வெற்றியளிக்கவில்லையென்று ஐரோப்பிய ஒன்றியத்தின் கடற்படை தெரிவித்துள்ளது.
17,300 தொன் எடையுள்ள இந்தக் கப்பலில் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், எகிப்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இக்கப்பல் சீமெந்து பைகளை ஏற்றிக் கொண்டே பயணித்துள்ளது. இந்தக் கப்பல் தாக்குதலுக்கு உள்ளான சமயம் சர்வதேச ரீதியில் சிபார்சு செய்யப்பட்ட பகுதி ஊடாகவே பயணம் செய்திருந்தது. தாக்குதல் குறித்து தகவல் கிடைத்தவுடன் ஹெலிக்கொப்டர் ஒன்றை அப்பகுதிக்கு அனுப்பிய போதிலும், கடற் கொள்ளையர்கள் ஏற்கனவே கப்பலை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தாகவும் தெரிவிக்கப்படுகிறது. நிலைமையை தாம் அவதானித்து வருவதாக சோமாலியாவிலுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் கடற்படையினர் தெரிவித்துள்ளனர். |
