மன்னாரில் கழுதைகளுக்கு மறுவாழ்வு; கணக்கெடுப்புப் பணி ஆரம்பமாகியது.

August 3, 2010 at 12:23 pm · Posted Public Articles

மன்னார்ப் பிரதேசத்தில் கட்டாக்காலி களாக அலைந்து திரியும் கழுதைகளின் தொகை பற்றிய கணக்கெடுப்பு ஆரம்ப மாகியுள்ளது. இதற்கான பணிப்புரைகள் பிரதேச செயலாளரால் கிராம சேவைகள் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. மன்னாரில் தற்போது கட்டாக்காலிக் கழுதைகள் பல்கிப் பெருகியுள்ளன. இவைகள் நகரின் பேருந்து நிலையங்கள், வர்த்தகப் பகுதிகள், பாடசாலைகள், பள்ளிகள், கோயில்கள் மற்றும் தெரு வீதிகளில் அலைந்து திரிந்து நகரை அசுத்தம் செய்வதோடு தறி கெட்டு ஓடித்திரிந்து பொது மக்களுக்கு விபத்துக்களையும் ஏற்படுத்துகின்றன. ஒரு காலத்தில் “விண்ணர்’ களின் செல்லப் பிள்ளைகளாகவும், பொதி, சுமக்கும் வாகனங்களாகவுமிருந்த இவைகள் தற்போது முற்றாகக்கைவிடப்பட்ட நிலையில் கட்டாக்காலிகளாகிவிட்டன. எனவே இவைகளைப் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தி மறுவாழ்வளிக்கும் முகமாக இக் கணக்கெடுப்பு இடம் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆயினும் தற்போது கழுதைகள் தென்னந் தோட்டங்களில் வண்டுகளை ஒழிக் கும் பணியில் பெரும் சேவையாற்றி வருகின்றன.

Your Comment

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>