யாழ்ப்பணத்தில் அதிகரிக்கும் விபத்துச்சம்பவங்கள்-நிருபர்.
July 26, 2010 at 4:11 pm · முக்கிய செய்தி
யாழ்ப்பாணம் கந்தர்மடம் பழம் வீதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தொன்றில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியொன்றுடன் அவர்கள் இருவரும் வந்த மோட்டார் சைக்கிள் மோதுண்டதால் விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது .
இவ்வாறு உயிரிழந்தவர்கள் யாழ்ப்பாணம் ஆரியகுளத்தடியைச் சேர்ந்த யாழ். பல்கலைக்கழக கலைப்பீட 3ஆம் வருட மாணவனான சாந்தகுமார் சந்துரு (வயது 25) மற்றும் சுண்டுக்குளியைச் சேர்ந்த பேராதனைப் பல்கலைக்கழக பொறியியல்பீட மாணவனான கலிஸ்ரஸ் கஜேந்திரன் (வயது 25) ஆகியோராவர்.இம்மாணவர்கள் இருவரின் சடலங்களும் மரண விசாரணைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
இதேவேலை கடந்த ஜனவரி முதல் இம்மாதம் ஆரம்ப பகுதிவரை சுமார்300பேர் விபத்துக்காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் 10க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்துள்ளனர்.
