ரூபா மில்லியன்1 பண மோசடி- சுங்க வட்டாரம்
கோட்டை தனியார் வங்கியொன்றில் ரூபா1மில்லியன் பணமாற்று மோசடியிலீடுபட்ட வங்கி முகாமையாளரும் வர்த்தகரும் கண்டுபிடிக்கப்பட்டு சுங்கதிணைக்களத்தினால் கைது.
December 31, 2010 at 6:00 pm
கோட்டை தனியார் வங்கியொன்றில் ரூபா1மில்லியன் பணமாற்று மோசடியிலீடுபட்ட வங்கி முகாமையாளரும் வர்த்தகரும் கண்டுபிடிக்கப்பட்டு சுங்கதிணைக்களத்தினால் கைது.
December 31, 2010 at 6:00 pm
விடுதலைப் புலிகளின் எழுச்சியும் வீழ்ச்சியும் என்ற தலைப்பில் அட்டைப் படம் கொண்ட புத்தகம் வெளியீடு நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
புத்தகத்தின் முதல் பிரதியை பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வழங்கி வைத்தார். புத்தகத்தின் நூலாசிரியர் பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய என்பது குறிப்பிடத்தக்கது.


December 31, 2010 at 10:10 am
தற்போதுள்ள நிதிக்கம்பனிகளுக்கான நிதிச்சட்டங்களை மாற்றம்செய்ய அரசு தீர்மானம். அநுமதிப்பத்திரம் இல்லாமல் வைப்பிடுவது தடை செய்யப்படவுள்ளது.
December 31, 2010 at 9:17 am
அநுராதபுர நூதனசாலையிலிரிந்து கி.மு5 க்கு முற்பட்ட 10வரலாற்று நாணயங்கள் கானாமல் போயுள்ளது.விசாரணைக்காக விசேட குழு விஜயம்.
December 29, 2010 at 10:47 am
நொச்சியாகம பிரதேசத்திலுள்ள ஆடைத்தொழிற்சாலையொன்றில் மின்சார தொழில்நுட்பவியலாளர் ஒருவரை மின்சாரம் தாக்கியதையடுத்து 30 ஊழியர்கள் காயமடைந்துள்ளனர்.
மின்சாரம் தாக்கிய இடத்திலிருந்து ஊழியர்கள் வெளியேற முயன்றபோதே மேற்படி ஊழியர்கள் காயமடைந்துள்ளனர்.
இவர்கள் நொச்சியாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மின்தொழில்நுட்பவியலாளர் பின்னர் அநுராதபரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
December 28, 2010 at 3:39 pm
இறக்குமதி செய்யப்பட்ட 2மில்லியன் முடைகள் ரூபா 11 மொத்தவிலையிலும் ரூபா12க்கு சில்லரை விலையிலும் நாளை சந்தைக்கு விடப்படவுள்ளது.
December 28, 2010 at 3:20 pm
சுங்க வரியிலிருந்து தப்பித்துக்கொள்ள போலி ஆவனங்களை பயன்படுத்திய 100 கம்பனிகள் தடை. ரூப.50மில். மோசடிநபர் நேற்றிரவு கைது.
December 28, 2010 at 8:18 am
இந்திய பாதுகாப்பு அமைச்சு செயலாளர் பிரதீப் குமார் இன்று பிற்பகல் 1.45 அளவில் இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார் என எமது விமான நிலைய செய்தியாளர் சற்று முன்னர் தெரிவித்தார்.
இவருடன் 7 பிரதிநிதிகளும் வந்தடைந்தனர். இந்திய சிறப்புவிமானமொன்றில் இங்கு வந்த அவர்கள் இலங்கை விமானப்படை விமானமொன்றில் கொழும்பை நோக்கி புறப்பட்டுள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
December 27, 2010 at 7:21 pm
கண்டி – பேராதெனிய நகரங்களுக்கிடையே இரட்டைப் புகையிரத வீதி அமைப்பதற்குத் தடையாக இருந்த 116 வீடுகளை நீதிமன்றத்தின் உத்தரவின்படி உடைக்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.
கண்டி புகையிரத நிலையத்திலிருந்து கெட்டம்பே வரையிலான பகுதியில் இவ் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டிருந்ததாக புகையிரத தினைக்களத்தின் கண்டி பிராந்திய காரியாலயம் தெரிவித்துள்ளது.
இவ் வீடுகளில் இருந்த பொதுமக்களை வெளியேறுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்த போதும் அவர்கள் வெளியேறாததன் காரணத்தால் நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டுள்ளது.
December 25, 2010 at 8:06 am
பொலன்னறுவை, வெலிக்கந்த மகாசென் வாவியில் படகு கவிழ்ந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆறாக அதிகரித்துள்ளதாக பொலீஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இருவர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை உயிரிழந்தவர்களில் மூன்று பெண்களின் சடலம் வைத்தியசாலை ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் இச்சம்பவத்தில் சிக்குன்டவர்கள் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் எனவும், காணமற்போனோரை தேடும் பணி மும்முரமாக இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் ரோகன குமார என்பவரும் பெண்கள் நால்வர் உட்பட ஒரு குழந்தை உயிரிழந்துள்ளமை இதுவரையில் ஊர்ஜிதம் செய்ப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
December 23, 2010 at 2:11 pm
கடந்த 2010.12.14ம் திகதி உயர் நீதிமன்றில் இடம்பெற்ற சட்டத்தரணிகளுக்கான சத்தியப்பிரமான நிகழ்வில் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் பிரதம நீதியரசர் J.A.N.De சில்வா முன்னிலையில் சத்தியப்பிரமானம் செய்துகொண்டார். பிரதமரின் புதல்வரும் இந்நிகழ்வில் சத்தியப்பிரமானம் செய்துகொண்டார்.
கெளரவ பட்டங்களுடன் பா.ம. இல் அநாகரிகமாக நடந்துகொள்ளும் அரசியல்வாதிகள் மத்தியில் தகுதியானவர்களின் பிர்வேசம் இலங்கை அரசியலில் ஆரோக்கியமாக அமையுமா என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
December 22, 2010 at 3:46 pm
நாட்டிலுள்ள சகல சிறைச்சாலைகளுக்கும் கையடக்கத் தொலைபேசி கொண்டு செல்வது முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் வி. ஆர். சில்வா தெரிவித்தார்.
கைதிகளைப் பார்வையிட வருபவர்கள் முதல் சிறைக் காவலர்கள், அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் என எவரும் கையடக்கத் தொலைபேசியைக் கொண்டு செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள்.
இதனையடுத்து களுத்துறை மாத்தறை சிறைச்சாலைகளில் கையடக்கத் தொலைபேசிப் பாவனை முற்றாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ஆணையாளர் நாயகம் கூறினார்.
December 22, 2010 at 2:36 pm
தெங்குச்செய்கை சபையின் முன்னனுமதியின்றி தென்னை மரம் வெட்டுதல் தடைசெய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் விடுக்கப்படவுள்ளது.
December 20, 2010 at 5:00 pm
திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்டபட்ட கல்லறப்பு பகுதியில் ஒரு தொகுதி ஆயுதங்கள் சீனக்குடா பொலிஸாரினால் நேற்று இரவு 7 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது. சீனாக்குடா பொலிஸ் பிரிவின் சுற்றாடல் பாதுகாப்பு பிரிவில் கடமை புரியும் உதவி பரிசோதகருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இவ் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதில் கிளைமோர் கண்ணிவெடிகள் 3, மதிவெடிகள் 5, பெச்சினேட்டர் 86, சி.எப் ரக வெடிமருந்து ஒரு கிலோ 800 கிராம் காணப்பட்டதாக
பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ்வாயுதங்கள் மாவிலாறு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட யுத்த நடவடிக்கையின் போது பயன்படுத்துவதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்தவை என பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
December 20, 2010 at 10:30 am
கொழும்பு நகரில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தவும், வாகன நெரிசல்களை கட்டுப்படுத்தவும் வேண்டி திங்கள் முதல் கண்கானிப்பு CCTV கமராக்கள் செயட்படுத்தப்படவுள்ளன.
December 17, 2010 at 4:56 pm
இலங்கையின் பொருளாதார வளர்ச்சி எதிபார்த்ததைவிட செப்.30ல் 8%அதிக வளர்ச்சியை காட்டுகிறது.GDP 7.5% வளார்ச்சியை எதிர்பார்ப்பதாக பகுப்பாய்வு குறிப்பிடுகிறது.
December 16, 2010 at 9:00 am