முக்கிய செய்தி Archive

இளம் விஞ்ஞானிகள் தெரிவில் கொக்குவில் இந்து மாணவன்

2010ஆம் ஆண்டுக்கான இளம் விஞ்ஞானிகள் தெரிவில் யாழ் கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவன் காலிங்கராசா ஹரிச்சந்திரன் இரண்டாமிடத்தைப் பெற்றுள்ளார்.

சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளக்கூடிய பசுமைக் கொள்கை திட்டத்தில் இம்மாணவனின் படைப்பு அமைந்திருந்த நிலையிலேயே அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதம் பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கண்காட்சியொன்று நடத்தப்பட்டது. இக்கண்காட்சியில் போட்டியாளர்களால் உருவாக்கப்பட்ட படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன.

இப்படைப்புகளில் மேற்படி மாணவனின் இயற்கைச் சூழலுக்கு ஏற்ற முறையில் எதிர்காலத்தில் வீடொன்றை அமைப்பதற்கான மாதிரித் திட்டம் சிறப்பிடம் பெற்றிருந்தது.

இவரின் திட்டமானது நாட்டுக்கு மிகவும் தேவையான மீளப் பயன்படுத்தக் கூடியதாக சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளக்கூடிய பசுமைக் கொள்கை கவனத்தில் எடுக்கப்பட்டே இவர் விருதுக்குரியவராகத் தெரிவுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

December 15, 2010 at 1:18 pm

32 கிலோ கஞ்சாவுடன் சந்தேக நபர் கைது

32 கிலோ நிறையுள்ள கஞ்சா வைத்திருந்த சந்தேக நபரை மொனராகலை எதுமலை பொலிஸார் கைது செய்துள்ளனர். எதுமலை குளப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட குலசேன என்ற சந்தேக நபரிடமிருந்து மேற்படி கஞ்சா தொகையையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயகொடி தெரிவித்தார்.

December 15, 2010 at 11:05 am

கலாபூஷன விருது வழங்கும் நிகழ்வு இன்று-Cரெப்

பல்வேறு கலைத்துறையில் பங்கழிப்புச்செய்த 200மூவினகலைஞர்களுக்கும் கலாபூசஷன விருது வழங்கும் நிகழ்வு ஜோன் டீ சில்வா கலையரங்கில் இன்று இடம்பெருகின்றது. 125சிங்கள, 50தமிழ், 25முஸ்லிம் கலைஞர்கள் இதில் விருதுவழங்கி கவுரவிக்கப்படவுள்ளனர்.

December 15, 2010 at 9:49 am

இலங்கையின் பொருளாதாரம் வளர்ச்சி- IMF

இலங்கை 7.5% பொருளாதார வளர்ச்சியை நோக்கியுள்ளது. இவ்வருட வரவு செலவு திட்ட துண்டுவிழும் தொகை 8%. வரவு செலவு திட்ட மறுசீரமைப்புக்கள் சாதக தன்மையை காட்டுவதாக IMF தெரிவிப்பு.

December 14, 2010 at 8:12 am

தேசிய கீதம் தமிழ் மொழியில் பாட முடியும் – அரசாங்கம் அறிவிப்பு

தேசிய கீதம் தமிழ் மொழியில் பாட முடியும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.  நிகழ்வுகள் மற்றும் விழாக்களின் போது தமிழ் மொழியில் தேசிய கீதத்தை பாட முடியும் என அமைச்சர் டபிள்யூ. டி.ஜே. செனவிரட்ன தெரிவித்துள்ளார்.

தேசிய கீதம் சரியான முறையில் பாடப்பட வேண்டும் என்பது தொடர்பில் மட்டுமே அமைச்சரவைப் பத்திரமொன்று சமர்ப்பிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

December 13, 2010 at 6:00 pm

புதையல் தோண்டிய ஐவர் கைது

பொத்துவில் தொகுதியின் கோமாரி காட்டு பகுதியிலிருந்து புதையலொன்றை அகழ்ந்து கொண்டிருந்த 5 சந்தேக நபர்களை இன்று பொத்துவில் பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்படும் போது சந்தேக நபர்களிடமிருந்து முச்சக்கர வண்டியொன்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர். விசேட அதிரடிப்படை வீரர்கள் காட்டு பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

December 13, 2010 at 3:29 pm

தரம் ஒன்று பரீட்சை வெட்டுப்பிள்ளி முடிவுகள் இன்று- கல்வியமைச்சர்

5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதிகூடிய புள்ளிகளாக ரோயல், விசாகா கல்லூரிகளுக்கு 179 புள்ளிகள்.

December 13, 2010 at 1:21 pm

துப்பாக்கிச்சூட்டில் மூன்று பூசகர்கள் படுகாயம்-Crep

 
 

யாழ் மாவட்டத்தின் வலிமேற்கு பிரதேசத்துக்குட்பட்ட சங்கானை பகுதியில் இன்று சனிக்கிழமை இரவு இனந்தெரியாத ஆயுததாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் பூசகர்கள் மூவர் படுகாயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

December 11, 2010 at 10:15 am

மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவராக நீதியரசர் சிறிஸ்கந்தராஜா ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றார்.

10.12.2010 – வெள்ளிக்கிழமை
 
மேன்முறையீட்டு நீதியரசர்களில் ஒருவரும் இலங்கையின் தலை சிறந்த நீதியரசர்களில் ஒருவருமான சிறிஸ்கந்தராஜா அவர்கள் இலங்கை மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவராக பதவியேற்றார்.
 
இன்றையதினம் அலரிமாளிகையில் இடம்பெற்ற நிகழ்வில் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் மேற்கொண்ட நீதியரசர் சிறிஸ்கந்தராஜா அவர்கள் தமது பதவியினை பொறுப்பேற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

December 11, 2010 at 8:02 am

யாழ்.குடாக்கடலில் “டொல்பின்” மீன்கள் கரையொதுங்குகின்றன

 
 
யாழ். குடாநாட்டுக் கடற்பகுதிகளில், “டொல்பின்” மீன்கள் கரையொதுங்கும் சம்பவங்கள் தற்போது அதிகரித்துள்ளன.
நேற்று வியாழக்கிழமை ஊர்காவற்றுறை, சுருவிலில் ஆழம் குறைந்த கடல் ஏரிப் பகுதியில் இரண்டு டொல் பின் மீன்கள் கரையொதுங்கியுள்ளன. இதில் ஒன்று உயிரிழந்த நிலையிலும் மற் றையது குற்றுயிராகவும் மீட்கப்பட்டுள்ளன.அப்பகுதி கடற்றொழிலாளர்கள் கடற்றொழிலுக்குச் சென்ற வேளையிலேயே இந்த “டொல்பின்” மீன்கள் அவர்களுடைய வலைகளில் மாட்டிக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

மீட்கப்பட்ட அந்த “டொல்பின்” மீன்கள் ஊர்காவற்றுறைப் பொலி ஸாரால் பொறுப்பேற்கப்பட்டதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பருத்தித்துறைக் கடற்பரப்பிலும் “டொல்பின்” மீன் ஒன்று கரையொதுங்கியிருந்தது

December 10, 2010 at 10:44 am

பாகிஸ்தான் கடற்படைத் தளபதி ஜனாதிபதியுடன் சந்திப்பு

பாகிஸ்தான் கடற்படைத் தளபதி அட்மிரல் நோமன் பசீர் இன்று (09.12.2010) ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை அலரி மாளிகையில் சந்தித்து சினேகபூர்வமாக உரையாடினார்.

இலங்கை கடற்படையின் 60 ஆம் ஆண்டு நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் கடற்படைத் தளபதி இலங்கை வந்துள்ளார். இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் கடற்படைப் பயிற்சிகள் மற்றும் அனுபவங்களைப் பரிமாறிக்கொள்ளும் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இலங்கைக் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் திஸேரா சமரசிங்க மற்றும் இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவர் ஆகியாரும் இவ்வைபவத்தில் கலந்துகொண்டனர்.

December 10, 2010 at 10:37 am

இர்றச்சிக்காக எருமை மாடு. 7பேர் கைது-Crep

வழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இறைச்சிக்காக எருமை மாட்டினை அருவை செய்த சந்தேகத்தின்பேரில் 7பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

December 10, 2010 at 10:31 am

உதுல் பிரேமரட்ன பினையில் விடுதலை- சட்டத்தரணி

அனைத்துப்பல்கலைக்கழக மாணாவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் உதுல் பிரேமரட்ன பிணையில் செல்வதற்கான அனுமதியினை கொழும்பு மேல்நீதிமன்றம் வழங்கியுள்ளது.

December 9, 2010 at 10:22 am

புதிய தேசிய மருந்தகக் கொள்கை 2011 இல் அமுல்படுத்தப்படும்

பேராசிரியர்.சேனக்க பிபிலே புதிய தேசிய மருந்தகக் கொள்கையை அறிமுகம் செய்துள்ளதாகவும் இந்த மருந்தகக் கொள்கை 2011 ஆம் ஆண்டில் இருந்து அமுல்படுத்தப்படும் எனவும் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த மருந்தக் கொள்கை மூலம் தாம் பெறுமதிமிக்க சுகாதார சேவையை வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
இதேவேளை குறித்த மருந்தக கொள்கை நவீனமயப்படுத்தப்பட்டது எனவும் இன்றைய காலகட்டம் வரை தகவல்களை உள்வாங்கி கொண்டது எனவும் முன்பு அமுல்படுத்தப்பட்ட கொள்கையில் சிறிதளவான மாற்றமே மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

December 8, 2010 at 11:35 am

பாராளுமன்ற அமர்வுகள் 15நிமிடம் ஒத்திவைப்பு-நிருபர்

பா.ம.உ கருஜெயசூரிய பாராளுமன்றில் பேசமுற்பட்டபோது இடம்பெற்ற குழப்ப நிலையை அடுத்து அமர்வு 15 நிமிடங்கள் ஒத்திவைப்பு.

December 8, 2010 at 10:49 am

பா.ம.உ நூர்டீன் மஷூர் காலமானார்-Crep

வன்னி மாவட்ட சிரிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உருப்பினர் நூர்டீன் மஷூர் கொழும்பு தனியார் மருத்துவமனையில் இன்று காலமானார்.

December 2, 2010 at 10:27 am

2018 ஆம் ஆண்டில் பொதுநலவாய விளையாட்டுக்களுக்கான முரிகளுக்கான குழுவில் நாமல் ராஐபக்ஸ டிலான் பேரேரா ஆகியோரும் உள்ளனர்.

2018 ஆம் ஆண்டில் பொதுநலவாய விளையாட்டுக்களுக்கான  முரிகளுக்கான குழுவில் நாமல் ராஐபக்ஸ  டிலான் பேரேரா ஆகியோரும் உள்ளனர் .அது சூழல் மையமாக கொண்டதாக இருக்கும் .-ஐனாதிபதி ஊடக பேச்சாளர் .

October 28, 2010 at 9:41 am