தமது பங்குகளை அரசுக்கு விரைவில் விற்பனை செய்வது தொடர்பில் தாம் பேச்சுவார்த்தை நடாத்துவதாக செல்-கேஷ் நிருவனம் அரிவித்துள்ளது. மில்லியன் 63அமெரிக்க டொலர் பெறுமதியில் 51%பங்குகளை கொள்வனவு செய்ய அமைச்சரவை அங்கீகாரம்.
October 7, 2010 at 11:27 am
பத்தரமுள்ள செத்சிரிபாய முன்னாலுள்ள விவசாய அமைச்சின் கொவிஜன மந்திரயவில் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டில். எவருக்கும் சேதமில்லை.
October 5, 2010 at 8:41 am
டெங்கு நுளம்புகளுக்கெதிரான கியூப பக்றீரியா தெளிக்கும் நிகழ்வு ஒக்டோபர் 07ல் கம்பளையில் ஆரம்பிக்கப்படும்.
October 5, 2010 at 8:14 am
மன்னார் வைத்தியசாலை Xகதிர் பிரிவு ஊழியர்கள் மேலதிக நேர கொடுப்பனவு கோரி சட்டப்படி வேலை செய்யும் போராட்டத்தை இன்று ஆரம்பித்துள்ளனர். தற்போது இரண்டு ஊழியர்களே இப்பிரிவுல் பணிபுரிவது குறிப்பிடத்தக்கது.
October 1, 2010 at 2:40 pm
சரத் பொன்சேகாமீதான தீர்ப்பினை எதிர்த்து மேன்முறையீட்டு வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவிப்பு.
October 1, 2010 at 8:52 am
பொதுநலவாய நாடுகளிலன் 400×4 அஞ்சல் போட்டியில் பங்கு கொள்ளும் இலங்கை குலாம் மீது சகவீரர் தொடுத்த வழக்கினையடுத்து அவர்களுக்கான பயணத்தடையை நீதிமன்றம் விதிப்பு.
September 30, 2010 at 12:55 pm
2010க்கான அடுத்த வரவுசெலவுத்திட்டம் எதிர்வரும் நவம்பர்- 22ல் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
September 30, 2010 at 11:43 am
சரத் பொன்சேகாவிற்கு 30மாத கால கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதை இராணுவ பேச்சாளர் உறுதிப்படுத்தினார்.
September 30, 2010 at 11:24 am
கடும்மழை காரணமாக அநுராதபுர ரஜங்கனய நீத்தேக்க 6 வான்கதவுகள் திறப்பு. புத்தளத்தின் சிலபகுதிகள் பாதிபடைய வாய்ப்பு.
September 29, 2010 at 1:27 pm
பாறிய வெள்ளப்பெருக்கு எதுவும் பதிவுசெய்யப்படாத போதும் புத்தளம்-மன்னார் வீதி உள்ளிட்ட காலிவீதியின் சிலபகுதியும் தடைப்பட்டுள்ளது.
September 29, 2010 at 10:35 am
வெல்லவத்தை- நாவல படகு சேவை தற்போது பத்தரமுல்லை வரை நீடிப்பு. தினமும் மு.ப.7.30, 9.30, பி.ப.4, 6 மணிகளுக்கு இப்படகுச்சேவை இடம்பெரும்.
September 28, 2010 at 6:45 pm
கடந்த இரவு அதிகூடிய மலைவீழ்ச்சியாக 177மில்.லீடர் மீகொடயிலும் 124மில்.லீடர் கொழும்பிலும் பதிவாகியுள்ளது. இதேகாலநிலை அடுத்த 2நாட்களுக்கு கானப்படுமென தெரிவிப்பு.
September 22, 2010 at 11:43 am
கட்சியின் மறுசீரமைப்பு கொள்கை தொடர்பான உடன்பாட்டிற்கு அடுத்த 10நாட்களில் வரமுடியுமென ஐ.தே.கவின் நிறைவேற்றுக்குழு தெரிவிப்பு.
September 18, 2010 at 2:50 pm
சரத்பொன்சேகா மீதான இராணுவ நீதிமன்ற தீர்ப்பு ஜனாதிபதி 26ம் திகதி நாடுதிரும்பியபின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்படும்.
September 18, 2010 at 1:07 pm
சரத்பொன்சேகாவிற்கெதிரான இராணுவ நீதிமன்றத்தில் அவர் குற்றவாளியாக கறுதப்பட்டு ஜனாதிபதியின் அங்கீகாரதிற்கான ஒத்திவைக்கப்பட்ட 3வருட சிறைத்தண்டனை தீர்ப்பு.
September 17, 2010 at 4:20 pm
கரடியனாறு வெடிப்புச்சம்பவத்தில் கொள்ளப்பட்டவர்கள் 60 என அறிவிக்கப்பட்ட தொகையில் மாற்றம். 27 பேர் கொல்லப்பட்டு 49பேர் காயமடைந்துள்ளனர் என இராணுவ பேச்சாளர் தெரிவிப்பு.
September 17, 2010 at 4:06 pm
பேருவலையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இடையில் அகப்பட்டு 7வயது சிறுவன் பலி. இதுதொடர்பில் 5 பொலிசாரும் 4 சிவிலியன்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணை தொடர்கிறது.
September 16, 2010 at 8:22 am